Wednesday, September 8, 2010

கேமராவை மூடு

மடிக்கணிணிகளும், பொடிக்கணிணிகளும் (Netbooks) திரைமேலே கேமரா துளை தாங்கி வர இப்போது இன்னொரு பிரச்சனை முளைத்திருக்கின்றது. உங்கள் அறையானது தூரத்திலிருந்து யாராலோ பார்க்கப்படலாம். அமெரிக்க பள்ளிகள் சிலவற்றில் வழங்கப்பட்ட மடிக்கணிணிகளை வீடு அல்லது ஹாஸ்டல் கொண்டு சென்ற மாணவ மாணவிகளின் நடவடிக்கைகள் இந்த மாதிரியாக வெப்கேமராக்களால் தூரத்திலிருந்து உளவு பார்க்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் இப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கின்றது. பள்ளி மடிக்கணிணிகள் திருடப்பட்டாலோ அல்லது காணாமல் போனாலோ கண்டு பிடிக்க அது உதவும் என்கின்ற நோக்கில் நிறுவப்பட்டுள்ள இந்த ஒளிந்திருக்கும் மென்பொருளால் எங்கோ அமர்ந்திருக்கும் ஒருவர், பள்ளிச் சிறார்களின் அறையை உற்று நோக்கலாம். அவர்கள் நடவடிக்கைகளை பார்க்கலாம்.
கொடுமையை இந்த யூடியூப் வீடியோவில் பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=Vza_bMuy42M

இதற்காக LANRev போன்ற அஃபிசியல் உளவு மென்பொருள்கள் பயன்படுத்தப்பட்டாலும், இணையத்தில் கிடைக்கும் எத்தனையோ இலவச மென்பொருள்கள் மூலம் இது மாதிரி தொலைவிலிருக்கும் மடிக்கணிணியின் வீடியோ கேமராவை தான் பார்க்கவென ஒரு ஹேக்கர் திருப்பிவிடலாம். எசகுபிசகாகப் போனால் மானத்தை கேமரா பறக்க விட்டுக்கொண்டிருக்கும் சுத்தமாக எந்த சுவடுமேயின்றி. கதவு திறந்திருந்தால் போவதை விட, படுக்கை அறையில் மடிக்கணிணி கேமரா திறந்திருந்தால் ஆகும் எஃபக்ட் ரொம்ப அதிகம். இணையம் வரைக்கும் போகும். சில சமயம் சன்நியூசிலும் போகும். இப்படித்தான் அந்த ஆ’சாமி’யின் வீடியோ வெளியானதா தெரியாது.

இதை தவிற்க என்னென்ன செய்யலாமென யோசித்த போது முதலாவது உங்கள் மடிக்கணிணி இந்தமாதிரியான integrated வெப்கேமரா கொண்டிருந்தால் பிறர் அதில் எதாவது ஒரு மென்பொருள் நிறுவும் அளவுக்கு விளையாட விடாதீர்கள். இரண்டாவதாக தேவைப்படும் போது மட்டும் வெப்கேமை பயன்படுத்தவும், தேவை இல்லாத போது அதை Device Manager-ல் போய் Disable செய்யவும். இது கொஞ்சம் டெக்னிக்கலாக உங்களுக்குத் தெரிந்தால், இருக்கவே இருக்கின்றது ஒரு பேப்பர் ஸ்டிக்கர். அந்த துளை மீது ஒட்டி விடுங்கள். அல்லது ஒரு sticky note-ஐயாவது ஒட்டிவிடலாம். அல்லது குறைந்த பட்சம் தேவை இல்லாத போது மடிக்கணிணிகளை மூடியாவது வைத்திருக்கலாம். பாருங்கள் எந்த மாதிரியான தகவல்களையெல்லாம் இப்போது சொல்ல வேண்டியிருக்கின்றது.

பதிவு செய்தவர்

http://pkp.blogspot.com/2010/03/blog-post.html



கேட்காத சப்தங்கள்

பூ பூக்கும் அந்த நொடியில் பலமான ஓசை எழுவதுண்டாம். எங்கோ படித்த நியாபகம். ஆனால் நம்மால் தான் அதை கேட்க முடிவதில்லை. காரணம் நம் காதுகளால் அந்த அலைவரிசை கூடின ஒலி அலைகளை கிரகிக்க முடிவதில்லை. பொதுவாக 20 Hz முதல் 20 kHz வரையேயான ஒலிகளையே நம் சாதாரண காதுகளால் கேட்க முடியும். அதனால் பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை என எதுகை மோனையோடு பாடி விட்டு அமைதியாகி விடவேண்டியது தான்.

சிறுசுகளுக்கும் பொடிசுகளுக்கும் கேட்கும் சத்தங்கள் கூட நம்மைப் போன்ற முப்பது அல்லது நாற்பது வயதான பெரியவர்களுக்கு கேட்பதில்லை. உதாரணத்துக்கு 15kHzக்கும் மேல் வரும் சத்தத்தை 25 வயதுக்கு மேற்பட்டவர்களால் கேட்க முடியாதாம். கீழ்கண்ட MP3-யை ஓட்டிப் பாருங்கள் (எச்சரிக்கை:மிக அதிக ஓசை எழுப்பும் கிளிப் இது)

Teenager Tone Mp3 Clip

உங்கள் காதுகளில் எதாவது கேட்டால் நீங்கள் 25வயதுக்கும் கீழ்பட்டவர் என அர்த்தம். எதுவும் கேட்காவிட்டால் உங்களுக்கு வயதாகிவிட்டது என அர்த்தம். வகுப்பறையில் ஆசிரியர் காதுகளில் கேட்காமல் ஆனால் தங்களுக்கு மட்டும் கேட்கும் படியான ரிங்டோன் வைக்க தங்கள் கைப்பேசிகளில் பதின்மர்கள் நாடும் MP3 இது. இதையே எதிர்மாறாக பதின்மர்கள் உங்கள் அறையில் நுழைந்து தொல்லை செய்யாதிருக்க இக்கிளிப்பை தொடர்ந்து ஓடவிட்டுக் கொண்டிருக்கலாம். எரிச்சலூட்டும் இந்த ஒலியை கேட்டு சிறுவர்கள் உங்களை நெருங்கவே மாட்டார்கள். நீங்களோ நிம்மதியாக உக்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருப்பீர்கள்.

கீழே வெவ்வேறு அலைவரிசைகளில், வெவ்வேறு கிளிப்கள். எந்த அலைவரிசை வரை உங்களால் கேட்கின்றதுவென பாருங்கள்.

பதிவு செய்தவர்
http://pkp.blogspot.com/2010/06/blog-post.html

மேலே செல்லச் செல்ல

கீழிருந்து மேலே செல்லச் செல்ல அல்லது மேலிருந்து கீழே செல்லச் செல்ல நாம் என்ன வெல்லாம் சந்திக்க நேரிடும் என்பதை அழகாக எடுத்துக்காட்டும் விளக்கப்படம் இது. படத்தை சொடுக்கி மீப்பெரிதாக்கி மேலும் விவரங்கள் அறியலாம். உலகின் மிக உயரமான கட்டடமான பர்ஜ் கலீபா 2,717 அடி என்றால் அதை விட உயரமான இடத்தில் இருக்கின்றதாம் டென்வர் நகரம். கடல் மட்டத்திலிருந்து 5,000 அடி உயரத்திலிருக்கின்றது அது. நம் தலைக்கு மேலே மிதந்து செல்லும் மேகங்கள் 7,000 அடி உயரத்திலிருக்கின்றதாம். இன்னும் மேலேச் செல்லச் செல்ல 10,000 அடியையும் தாண்டி 11,450 அடி உயரத்தில் இருக்கின்றது திபெத்திய தலைநகரம் லாசா. இன்னும் மேலே நாம் மூச்சு வாங்கச் சென்றால் 19,334 அடி உயரத்தில் இருக்கின்றது ஆப்ரிக்க கிளிமஞ்சாரோ சிகரமும், 20,320 அடி உயரத்தில் இருக்கின்றது வட அமெரிக்க மவுண்ட் மெக்கின்லே சிகரமும். 23,000 அடி உயரத்தில் தான் நாம் தூரத்தில் கண்டு வியக்கும் உயர் மேகங்கள் நம்மை மூடிக்கொண்டிருக்கின்றன. தப்பித்தவறி 26,000 அடியையும் எட்டி விட்டால் அங்கே வாயு மண்டலத்தின் எல்லை போல “மரண மண்டலம்” தொடங்குகின்றது. இங்கே நாம் உயிர்வாழ தேவையான பிராணவாயு கிடைப்பது குறையத்தொடங்குவதால், மலை ஏறுபவர்கள் சிலிண்டர்கள் தூக்கத் தொடங்க வேண்டும். 29,029 அடியில் எவரெஸ்ட் வந்துவிடும். அதற்கு மேலே நாம் நடக்க முடியாது. பறக்கத்தான் வேண்டும். 32,000 அடி உயரங்களில் விமானங்கள் பறக்கின்றன. சில வல்லூறுகளும் பறக்கின்றன. அதற்கு மேலே என்னவென இன்னும் மேலே அறிய ஆசை. என்ன அழகான பூமி இது.

Go green எனச் சொல்லி பிளாஸ்டிக்கை குறை, காகிதத்தை தவிர் என ஜனங்களை உளுக்கெடுத்துவிட்டு அங்கே கடலில் எண்ணெயை கசிய விட்டு பூண்டோடு சுற்றுச் சூழலை அழித்துக் கொண்டிருக்கின்றார்கள். சாண் ஏற முழம் சறுக்கின கதையாய் இயற்கையை மனிதன் காப்பாற்ற விழைய, அது கேலிக் கூத்தாகி, கடைசியில் இயற்கையை இயற்கைதான் காப்பாற்ற வேண்டுமோ?



பதிவு செய்தவர்
http://pkp.blogspot.com/2010/07/blog-post.html

பிரவுசர்களின் வேகம்

பல்வேறு இணைய பிரவுசர்களின் வேகத்தை இங்கே எல்லாருக்கும் புரியும் படியாய் படமாக்கி காட்டியிருக்கின்றார்கள்.

IE-யின் மார்க்கெட் சரிந்து கொண்டிருப்பதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.இது ஏப்ரல் 2010 நிலவரம். மூலம்:NetApplications.


பதிவு செய்தவர்
http://pkp.blogspot.com/2010/05/blog-post.html

Tuesday, September 7, 2010

ஒரு சாப்ட்வேர் இன்ஜினியரின் புலம்பல்....

விடிகாலை விழித்து, வெந்நீரில் குளித்து,
வேகாத உணவினை விரும்பாமல் புசித்து,
வாகன நெரிசலில் சாரலில் நனைந்து,
வேண்டா வெறுப்புடன் தொடங்குகிறது அந்நாள்.

புரியாத மொழி பேசும் கணினியை முறைத்து,
பிழையான வேலைக்காய் தன்மானம் தொலைத்து,
உறவுகள் மறந்து உழைப்பதன் பலன்
மூக்குக்கண்ணாடியும், கொஞ்சம் முதுகு வலியும்.

பணி நிமித்தமாய் வெளிநாடு சென்ற நண்பன்
புதுப்புது இடங்களில் விதவிதமாய்
ஃபேஸ்புக்கில் சிரிக்க, பெங்களுரைத் தாண்டாத
விரக்திகள் எரிச்சலைக் கிளப்புகிறது.

சென்னை வெயிலின் திடீர் மழையைப் போல
சென்ற வாரம் பணியில் சேர்ந்த தேவதைக்கு
காதலன் இருப்பதாய் கேட்டறிந்த உடனே
பளிச்சென எறிந்த பல்புகள் அணைகிறது.

பாசமாக பேசும், பணிச்சுமை திணிக்கும்,
உயர்வாகப் பேசி குறைவாக மதிப்பிடும்,
அன்பான மேலாளரிடம் கேட்க தோன்றுகிறது
"நீங்க நல்லவரா? கெட்டவரா ?".

அலுவலக அரசியல் புரியாமல் விழித்து,
அறிவுக்கெட்டா தர்க்கங்களில் 'புரிந்தது'
போல நடித்து, வீட்டிற்கு செல்வதற்குள்
"செல்லமே" கூட முடிந்து விடுகிறது.


செம்மறி ஆடுகள்
பலிக்காக நேந்து விடப்படுகின்றன.
மென்பொறியாளர்கள்
பணிக்காக நேந்து விடப்படுகிறார்கள்.

பதிவு செய்தவர்
http://sangkavi.blogspot.com/2010/09/blog-post.html

ஈமெயில்களை எஸ்.எம்.எஸ் களாகப் பெறுவது எப்படி? (mail alert)

ஈமெயில்கள் நம் அன்றாட வாழ்வில் ஒரு பகுதியாக ஆகிவிட்டன. மொபைல் மூலமே இப்போதெல்லாம் மெயில்களை கையாளுகிறார்கள். blackberry மொபைல்கள் இதற்காகவே பிரபலம் அடைந்திருக்கின்றன. ஆனால் இவற்றிற்கு செலவு அதிகம். மேலும் பலரும் மெயில்களை அலுவலக கணினி மூலமாகவும், இன்டர்நெட் மையங்கள் மூலமாகவுமே பார்க்கிறார்கள். நாம் கணிப்பொறியிலிருந்து தொலைவில் இருக்கும் போது மெயில் வந்திருக்கிறதாவென எப்படி அறிவது?


way2sms தளத்தில் இந்த வசதி இருந்தாலும் mail alertகளை பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை மீண்டும் activate செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எஸ்.எம்.எஸ் களை பெற இயலாது. இவற்றை நிரந்திரமாக மீண்டும், மீண்டும் activate செய்யாமல் பெறுவது எப்படி? இதற்க்கு windows live தளம் உதவுகின்றது. login.live.com பக்கத்திற்கு சென்று windows live id மூலம் லாகின் செய்யுங்கள், அக்கௌன்ட் இல்லையென்றால் sign up செய்து உள்நுழையுங்கள், பின்னர் device பகுதியில் add phone கிளிக் செய்து உங்கள் மொபைல் நம்பர் ஐ உள்ளீடு செய்யுங்கள். இப்பொழுது உங்கள் மொபைலுக்கு verification code அனுப்பப்படும். code ஐ உள்ளிட்டு verify செய்துக்கொள்ளுங்கள். இனி இந்த முகவரிக்கு வரும் மெயில்கள் வந்தால் subject உடன் உங்களுக்கு sms அனுப்பப்படும். நீங்கள் default ஆக வேறு ஈமெயில் அட்ரஸ் களை பயன்படுத்துபவராக இருந்தால் அந்த முகவரியிலிருந்து windows live id முகவரிக்கு மெயில்களை forward செய்துகொள்ளுங்கள் இதன் மூலம் உங்கள் தற்போதைய முகவரிக்கு வரும் மெயில்களையும் sms மூலம் பெறமுடியும். gmail userகள் மெயிலை forward செய்ய settings சென்று Forwarding and POP/IMAP பகுதியில் Forward a copy of incoming mail to இல் ரேடியோ பட்டனை கிளிக் செய்து windows live id ஐ இடவும். இங்கும் உங்கள் மெயிலுக்கு verification code அனுப்பப்படும். அதனை verify செய்து விட்டால் இனி உங்கள் gmail மெயில்களுக்கும் sms அனுப்பப்படும்

பதிவு செய்தவர்
http://thoughtsbyvasu.blogspot.com/2010/07/mail-alert.html

எக்சலின் அடிப்படை பார்முலாக்கள்



உதாரணமாக ஒரு எக்சல் கால்குலேசனை எடுத்துகொள்வோம்.



SAMPLE FORMULAS:
Type of Equation:
Entered in Cell D3:
Result Displayed in D3:
Addition of Two Cells
= A2 + B3
46
Addition of a Constant
= B1 + 25
53
Addition of a Row of Cells
= SUM (A1:C1)
148
Addition of a Column of Cells
= SUM (B1:B3)
123
Addition of a Range of Cells
= SUM (B1:C3)
237
Addition of Scattered Cells
= SUM (A2,B1,C3)
75
Subtraction of a Constant
= C1 – 10
85
Subtraction of a Cell
= B2 – B1
63
Multiplication by a Constant
= A3 * 20
60
Multiplication of Two Cells
= B3 * C3
20
Multiplication by a %
= A1 * .40
10
Multiplication by a %
= B1 * 25%
7
Division by a Constant
= C1 / 5
19
Division by a Cell
= A2 / C2
3
Exponentiation (Squaring)
= B3 ^ 2
16
Exponentiation (Cubing)
= A3 ^ 3
27
Square Roots
=SQRT(A1)
5
Square Roots
= A1 ^ 0.5
5
Cube Roots
= B1 ^ (1/3)
3.036589
Increasing by a Percentage (4%)
= A1 + (A1 * .04)
26
Increasing by a Percentage (4%)
= A1 * 1.04
26
Increasing by a Percentage (4%)
= A1 + (A1 * 4%)
26
Decreasing by a Percentage (8%)
= A1 - (A1 *.08)
23
Decreasing by a Percentage (8%)
= A1 *.92
23
Decreasing by a Percentage (8%)
= A1 – (A1 * 8%)
23
Calculate a Percentage (Part/Sum)
=A3 / $D$3
25% (Format as a %)
Average of a Column
= AVG (B1:B3)
41
Average of a Row
= AVG (A3:C3)
4
Average of a Range
= AVG (B1:C2)
57
Formula referring to a cell in another worksheet
= Sheet2!C4
The contents of cell C4 in Sheet2