Sunday, August 29, 2010

தொல்லை தரும் அழைப்புகளை நீக்க

மொபைல் இன்றைய காலகட்டத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கிராமங்களிலிருந்து நகரம் வரை மொபைல் பரவியுள்ளது. சாதரண மனிதன் கையிலும் மொபைல் உள்ளது. இதனை பொருளாதார வளர்ச்சி எனவும் கூறலாம். எங்கு பார்த்தாலும் செல்போன் கோபுரங்கள், செல்போன் கடைகள் பரவியுள்ளது.



Service Provide அதாவது Aircel, Airtel, Vodafone போன்ற பல்வேறு நிறுவனங்களின் மூலமாக போன்செய்யும் வசதி பெற்று வருகிறோம். SERVICE,ALERTS போன்ற சேவைகளை தினமும் போன் செய்து சர்வீஸை ஆக்டிவேட் செய்யுமாறு நாம் பயன்படுத்தும் கம்பெனியிலிருந்து தினமும் பல அழைப்புகள் வரும்.

நாம் சில நேரங்களில் முக்கியமான வேலைகளில் இருக்கும் போது இது போன்ற போன் கால்கள் தொந்தரவு செய்யும். ஏன் நானே இது போன்ற பல்வேறு போன்களால் சிரமத்திற்கு ஆளாகியிருக்கிறேன். இதில் பெரிய கொடுமை என்னவென்றால் எந்த சர்வீஸை ஆக்ட்டிவேட் செய்தோம் என்றே தெரியாது ஆனால் பேலன்ஸ் மட்டும் குறைந்து இருக்கும், என்ன காரணம் என்று புரியாமல் வாடிக்கையாளர் சேவை மையத்தை நாடி காரணம் கேட்டால், நம் தரப்பிலிருந்து தான் ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளதாக கூறுவார்கள். இது போன்ற போன் அழைப்புகளை நிறுத்த முடியும் அதை பற்றி கீழே காண்போம்.

முதலில் National Do Not Call Registry (NDNC Registry) என்ற தளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளவும்.

1.AIRCEL:

ஏர்செல்லில் இருந்து வரும் அழைப்புகளை நிறுத்த "START DND" to "1909" (Toll Free) என்ற என்னுக்கு SMS அனுப்ப வேண்டும், இதனை மீண்டும் Deactivate செய்ய ”STOP DND” to “1909” (Toll Free).


2.AIRTEL:
ஏர்டெல்லில் இருந்து வரும் அழைப்புகளை நிறுத்த “START DND” to 121 என்ற என்னுக்கு SMS அனுப்ப வேண்டும், இதனை மீண்டும் Deactivate செய்ய "STOP DND" to 121.




3.VODAFONE:

Vodafone-லிருந்து வரும் அழைப்புகளை நீக்க ACT DND to 111என்ற என்னுக்கு SMS அனுப்ப வேண்டும்.
Deactive செய்ய CAN ACT என்ற என்னுக்கு SMS செய்ய வேண்டும்.









4.BSNL:

BSNL-ல் இருந்து வரும் அழைப்புகளை நீக்க, IVRS ஆப்ஷன் மூலகாக நிறுத்த 1909 என்ற என்னுக்கு போன் செய்து Active மற்றும் Deactive செய்ய முடியும்.

SMS மூலமாக நிறுத்த START DND to 1909 மீண்டும் அதனை Deactive செய்ய STOP DND to 1909.




5.Reliance:



Reliance-ல் இருந்து வரும் அழைப்புகளை நீக்க click இந்த தளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளவும்.







6.Tata Indicom:
Tata indicom-ல் இருந்து வரும் அழைப்புகளை நீக்க Click இந்த தளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளவும்.








7.Tata Docomo:

TATA DOCOMO-ல் இருந்து வரும் அழைப்புகளை நிறுத்த START DND to 1909 (toll free) தனை மீண்டும் ஆக்ட்டிவேட் செய்ய STOP DND to 1909 (toll free).








8. Idea Callular:

Idea-வில் இருந்து வரும் அழைப்புகளை நிறுத்த “START DND” to 1909 தனை மீண்டும் ஆக்ட்டிவேட் செய்ய “STOP DND” to 1909.









பதிவு செய்தவர்
இரா.குமரேசன்

http://tamilcomputerinfo.blogspot.com/2010/08/blog-post_26.html

Tuesday, August 17, 2010

உண்மையிலேயே பெண் எதை வேண்டும் என்பாள்?

ஒரு சிற்றரசன் இருந்தான். அவன் பெயர் இளஞ்செழியன். ஆள் அசத்தலாக இருப்பான். தோற்றத்தில் திரைப்பட நடிகர் அஜீத்தைப் போல் இருப்பான். செயல்களில் திரைப்பட நடிகர் விக்ரமைப் போல இருப்பான். அத்துடன் மகா புத்திசாலி வேறு.

அவனுடைய போதாத நேரம். தன்னுடைய நாட்டையும் பறிகொடுத்து, பக்கத்து நாட்டில் இருந்த மாமன்னனிடம் சிறைப்பட நேர்ந்தது, அந்த மாமன்னன் நடந்து முடிந்த யுத்தத்திலேயே அவனைக் கொன்றிருக்கலாம். ஆனால், அவனுடைய தோற்றத்தையும், புத்திசாலித்தனத்தையும், பேச்சுத்திறமையையும் பார்த்து, அவனைக் கொல்லாமல் சிறை பிடித்துக்கொண்டு வந்துவிட்டான்.

இளஞ்செழியனின் ஜாதகத்தைப் பார்த்த, மாமன்னனின் ஆஸ்தான ஜோதிடர், அவனுடைய ஜாதகத்தில் பல யோகங்கள் இருப்பதாகவும், ஐந்து கிரகங்கள் உச்சமாக இருப்பதாகவும், அத்துடன் மகாபுருஷ யோகம் இருப்பதாகவும் கூறினார்.

அதைக்கேள்வியுற்ற மாமன்னன், அவனுக்குத் தன் ஒரே மகளை மணம் முடித்து வைக்கவும், அவன் நாட்டைத் திருப்பி அவனுக்கே கொடுக்கவும் விரும்பினான். மாமன்னனின் மகள் மிகவும் அழகாக இருப்பாள்.

மாமன்னன், அதை வெளியில் சொல்லாமல், அவனை அழைத்து அவனுக்கு ஒரு சவால் விடுத்தார். சவாலில் அவன் வெற்றி பெற்று விட்டால், அவனைச் சுதந்திரமாக விட்டு விடுவதாகவும் சொன்னார்.

என்ன சவால்?

மிகவும் கஷ்டமான கேள்வி ஒன்றிற்கு, அவன் நிதானமாக யோசித்து நல்ல பதிலை - சரியான பதிலைச் சொல்ல வேண்டும். அத்துடன் அதை யோசித்துச் சொல்ல, அல்லது பல இடங்களில் விசாரித்துத் தக்க பதிலைச் சொல்ல கால அவகாசமும் கொடுத்தார். ஒரு வருட காலம் அதற்கு அவகாசம். அந்த காலகட்ட்டத்திற்குள் அவன் சரியான பதிலைச் சொல்லாவிட்டால், இறக்க நேரிடும் என்பதையும் நிபந்தனையாக்கிச் சொன்னார்.

உயிரா? தக்க பதிலா? அதுதான் சவால்!

சரி, கேள்வி என்ன?

“உண்மையிலேயே பெண் எதை வேண்டும் என்பாள்?” அதுதான் கேள்வி
The question was: What do women really want?

பெண்கள் மனதைப் புரிந்து கொள்ள முடியாது என்று சொல்லப்படும் சொல்லடைக்கு மாமன்னன் விடைகாண விரும்பினான். அதனால்தான் அந்தக் கேள்வி.

பெண்ணிற்கு உண்மையிலேயே என்ன வேண்டும்? எது கொடுக்கப்பட வேண்டும்? எதைக் கொடுத்தால் அவள் அதிகம் மகிழ்வாள்? அத்துடன் நிரந்தரமான மகிழ்வு கொள்வாள்? எப்படி வேண்டுமென்றாலும் நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.

பெரிய ஞானிகளால் கூடப் பதில் சொல்ல முடியாத கேள்வி இது. இளம் வயதினான இளஞ்செழியன் இதற்கு எப்படிப் பதில் சொல்வான்?

எப்படியும் பதில் சொல்லியாக வேண்டும். உயிர் பிழைக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறதே. ஆகவே மாமன்னனின் சவாலை இளஞ்செழியன் ஏற்றுக் கொண்டான்.

அவன் தன் நாட்டிற்குத் திரும்பினான். பலரையும் சந்தித்துப் பேசலுற்றான். ஞானிகள், சாஸ்திரங்களை அறிந்தவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், நீதிபதிகள் என்று ஒருவரையும் விட்டு வைக்காமல் பலரிடமும் பேசிப் பார்த்தான். ஆனால் யாரிடம் இருந்தும் ஒரு திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை.

ஆனால், சில பெரியவர்கள், அவனுக்கு ஒரு நல்ல யோசனையைச் சொன்னார்கள். நகரத்தின் கோடியில் வசித்துக்கொண்டிருக்கும் சூனியக்காரியைப் போய்ப் பார்க்கச் சொன்னார்கள். கண்டிப்பாக அவள் தகுந்த பதிலையும் சொல்வாள் என்று அவனுக்கு நம்பிக்கையையும் கொடுத்தார்கள்.

அவளை நமது நாயகனும் அறிவான். அவளுடைய கட்டண விகிதங்கள் யாராலும் தாக்குப் பிடிக்க முடியாது. அந்த அளவிற்கு இருக்கும். அதனால் அவளைப்போய்ப் பார்ப்பதற்கு நமது நாயகனும் விருப்பவில்லை.

மாமன்னன் கொடுத்திருந்த காலக் கெடுவும் முடிவிற்கு வரும் நிலையில் இருந்தது. இன்னும் ஒருநாள் மட்டுமே பாக்கியிருந்தது.

வேறு வழியின்றி, அவளைப் பார்த்துப் பேசினான். தன்னுடைய கேள்வியையும் சொன்னான். அவள் சரியான பதிலைச் சொல்வதற்குச் சம்மதித்ததோடு, அதற்குரிய விலையையும் சொன்னாள். அந்த விலக்கு அவன் சம்மதித்தால், பதில் கிடைக்கும் என்றாள்.

என்ன விலை?

நாயகன், தன்னுடைய நெருங்கிய நண்பன் நந்திவர்மனை தனக்கு மணம் முடித்து வைக்க வேண்டுமென்றாள்.

நாயகன் அதிர்ந்து போய்விட்டான்.

அழகு, வீரம், இளமை, கெட்டிக்காரத்தனம் அத்தனையும் கொண்ட தன் நண்பன் நந்திவர்மனைச் சூனியக்காரி யிடம் பலி கொடுக்க அவனுக்கு விருப்ப மில்லை. அதைவிட உயிரை விடுவதே மேல் என்று முடிவுகட்டினான்.

திரைப்பட நடிகர் கார்த்திக் போன்ற தோறத்துடன் இருக்கும் அவனுடைய நண்பன் எங்கே? அழுக்குப் பிடித்த இந்தச் சூனியக்காரக் கிழம் எங்கே?

சூனியக்காரியைப் போன்ற இழிபிறவியை - அசிங்கத்தின் மொத்த உருவை அவன் இதுவரை பார்த்ததே இல்லை. தன் நண்பனை அநியாயமாகப் பலி கொடுக்கவும் விரும்பவில்லை. ஆகவே முடியாது என்று கூறிவிட்டுத் திரும்பி விட்டான்.

விதி வேறு விதமாக விளையாடியது. சூனியக்காரியின் வீட்டு வாசலில் காத்துக்கொண்டிருந்த நண்பன், சூனியக்காரியின் கோரிக்கையைக் கேட்டு, தன் நண்பனின் உயிரைக் காப்பாறுவதற்காக, அவளை மணந்து கொள்ளச் சம்மதிப்பதாகக் கூறியதோடு, தன் நண்பனுடன் மீண்டும் சூனியக்காரியின் மாளிகைக்குள் சென்று அவளுடன் பேசலுற்றான்.

இளஞ்செழியனின் உயிரைவிட அது ஒன்றும் பெரியதல்ல என்றான்.

இருவரும் சென்று சூனியக்காரியிடம் பேசினார்கள். சம்பந்தப் பட்டவனே நேரில் வந்து, தன்னை மணக்கச் சம்மதம் தெரிவித்தவுடன், சூனியக்காரி அதீத மகிழ்ச்சி கொண்டாள்.

அத்துடன் ஒரு ஆண்டாக அவர்கள் தேடிக்கொண்டிருந்த (கேள்விக்கான) சரியான பதிலையும் சொன்னாள்.

என்ன பதில்?

கேள்வியை மீண்டும் நினைவு கூறுங்கள்:

கேள்வி: “உண்மையிலேயே பெண் எதை வேண்டும் என்பாள்?” The question was: What do women really want?

அவள் சொன்ன பதில்: 'A woman wants to be in charge of her own life.'

ஆமாம், “ஒரு பெண் தனக்குத்தானே எல்லாமுமாக இருக்க வேண்டும் என்று நினைப்பாள்.” ஆசைப்படுவாள்.

அதுதான் சரியான பதில்

செய்தி நாடு முழுவதும் பரவியது. அனைவரும் அதை ஒப்புக்கொண்டார்கள். சூனியக்காரி ஒரு பெரிய உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறாள் என்று பலரும் பேசிக்கொண்டார்கள். பல பெண்களும் அதை சிலாகித்துப் பேசினார்கள்.

மாமன்னன் இந்தச் சரியான பதிலால் மகிழ்வுற்று, இளஞ்செழியனுக்கு, விடுதலை அளித்ததோடு, அவனுடைய நாட்டையும் திருப்பிக்கொடுத்தான்.

வாக்குத்தவறாமல், அந்த சூனியக்காரிக்கான விலை கொடுக்கப்பட்டது. ஆமாம், இள்ஞ்செழியனின் நண்பனுக்கும் அந்த சூனியக்காரிக்கும் திருமணம் விமரிசையாக நடைபெற்றது.

அடுத்து நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் நந்திவர்மனின் முதல் இரவும் வந்து சேர்ந்தது. ஒரு பயங்கர அனுபவத்தை எதிர்கொள்ளும் முகமாக, நந்திவர்மனும் தன் மனதைத் தேற்றிக் கொண்டு, முதல் இரவு நடக்க இருக்கும் அறைக்குள் நுழைந்தான்.

அடடா, என்ன ஒரு அற்புதமான காட்சி?

அவன் இதுவரை பார்த்திராத அழகு தேவதை ஒருத்தி படுக்கையில் அமர்ந்திருந்தாள். அவன் சொக்கிப்போகும் விதமாகப் புன்னகை ஒன்றையும் உதிர்த்தாள்.உங்கள் மொழியில் சொன்னால், தமன்னாவைப் போன்ற தோற்றமுடைய பெண் படுக்கையில் அவனை எதிர் கொண்டாள்.

எப்படி இருக்கும்?

மயங்கி விழாத நிலையில் நந்திவர்மன்.

“என்ன நடந்தது?” என்று நந்திவர்மன் வினவ தேவதையாக மாறியிருந்த சூனியக்காரி பேசலுற்றாள். தான் சற்றும் அழகில்லாதவள் என்று தெரிந்தும் தன்னை மணந்து கொண்ட நந்திவர்மனின் அன்பிற்கும், வீரத்திற்கும், நல்ல மனதிற்கும் பரிசாகத் தான் இந்த வடிவத்திற்குத் தன்னை மாற்றிக் கொண்டு விட்டதாக அவள் இனிய குரலில் தெரிவித்தாள்.

அத்துடன் அவள் சொன்னாள். தான் பாதி நேரம் தன் பழைய தோற்றத்துடனும், பாதி நேரம் இந்தத் தோற்றத்துடனும் இருந்தாக வேண்டும் என்றும் சொன்னாள்.

“நான் பகலில் அழகாக இருக்க வேண்டுமா? அல்லது இரவில் அழகாக இருக்க வேண்டுமா? உங்கள் விருப்பத்தைச் சொல்லுங்கள்!” என்று கேட்கவும் செய்தாள்.

நந்திவர்மன் சற்று சிந்தனை வயப்பட்டான்.

“பகலில் இவள் அழகாக இருந்தால், தன்னுடைய உறவினர்களும், நண்பர்களும் வந்து செல்ல முடியும். அதே நேரத்தில் இரவு நேரங்களில் இத்தனை பெரிய மாளிகையில், இவளுடைய சூனியத்தன்மை அச்சுறுத்துவதாக இருக்கும். ஆனால், பகலில் எப்படியோ இருந்துவிட்டுப் போகிறாள், இரவில் இவள் இளமையாகவும் அழகாகவும் இருந்தால்தான் தன்னால் மகிழ்சியாக இருக்க முடியும். வாழ்க்கையையும் அனுபவிக்க முடியும்” என்ற இரு வேறு சிந்தனைகள் அவன் மனதில் தோன்றி மறைந்தன.

இந்தக் கதையைப் படிக்கும் நீங்கள் அந்த இடத்தில் இருந்தால், உங்கள் சாய்ஸாக எதைச் சொல்வீர்கள்?

இந்தக் கதையைப் படிக்கும் நீங்கள் பெண்ணாக இருந்தால், உங்கள் கணவனின் சாய்ஸ் எதாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்?

நன்றாக யோசித்து ஒரு முடிவிற்கு வாருங்கள்.

கதையின் முடிவு கீழே இருக்கிறது. அத்துடன் உங்களின் முடிவு ஒத்துப்போகிறதா என்று பாருங்கள்

நந்திவர்மன் என்ன சொன்னான் என்பதைவிட, நீங்களாக இருந்தால் என்ன சொல்லியிருப்பீர்கள் என்பதுதான் முக்கியம். ஆகவே தீர்க்கமாக அதை முடிவு செய்து விட்டு, பக்கத்தைக் கீழே இறக்கிப் பாருங்கள் (scroll down)

ஓக்கேயா?

V

V

V

V

V

V

V

V

V

V

V

V

V

V

V
நந்திவர்மன் கெட்டிக்காரனல்லவா? “உண்மையிலேயே பெண் எதை
வேண்டும் என்பாள்?” என்ற கேள்விக்குப் பதிலாகத் தன் மனைவி
தன் நண்பன் இளஞ்செழியனுக்குச் சொன்ன பதில் அவனுக்குத் தெரியுமல்லவா? அதனால், “உன் விருப்பத்திற்கே அதை விட்டு
விடுகிறேன். உன் விருப்பப்படி நீ எப்படி இருந்தாலும் எனக்குச்
சம்மத்மே” என்றான்.
I would allow YOU to make the choice on your own!

அந்தப் பதிலைக் கேட்டு மிகவும் மகிழந்தவள், “என்னை மதித்து நீங்கள் இதைச் சொன்னதால், என் வாழ்க்கைக்கு நானே முடிவெடுக்க வேண்டும் என்று சொன்னதால், நான் இன்று முதல் இப்புதிய தோற்றத்துடனேயே உங்களுடன் எப்போதும் இருக்கப்போகிறேன்!

கதை எப்படி உள்ளது?

கதையின் நீதி என்ன?

There is 'witch' in every woman. If you respect her and allow her to be in charge of her own life, she will become an ANGEL!

ஓக்கேயா?

பதிவு செய்தவர்
SP.VR. SUBBAIYA
http://classroom2007.blogspot.com/2010/08/short-story.html


Saturday, August 14, 2010

திருமணத்திற்கு முன் இரத்தப் பரிசோதனை ஆண் பெண் இருவருக்கும் அவசியமா?

திருமணத்திற்கு முன் இரத்தப் பரிசோதனை ஆண் பெண் இருவருக்கும் அவசியமா என்று கேட்டால் நிச்சயம் அவசியம் என்றே கூறுவேன். திருமணத்திற்கு முன் இரத்தப்பரிசோதனை செய்வதன் மூலம் என்ன நோய் இருக்கிறது என்பதை முன் கூட்டியே அறியலாம்.

இன்று நிறைய ஆணுக்கும் பெண்ணுக்கும் அவர்களுக்கு என்ன நோய் இருக்கிறது என்று அறியாமல் திருமணத் செய்வதன் மூலம் திருமணத்திற்கு பின் அவர்களுக்கு இருக்கும் நோய் அறிகுறி தெரியவந்தால் இருவருக்குமே அந்த வாழ்க்கை நிலையும் இல்லை, நிம்மதியும் இல்லை. இருவர் குடும்பதிற்கும் ஊர் உலகத்தில் அவப்பெயர்தான். திருமணம் நிச்சயம் ஆவதற்கு முன் ஆணும் பெண்ணும் தங்கள் கருத்துக்களை பரிமாறுவதற்கு இன்று நம் வீட்டில் அனுமதிக்கின்றனர் அது போல் ஆண், பெண் ஜாதகத்துடன் பரிசோதனை சான்றிதழையும் இணைக்கலாம் என்பது என் கருத்து. இது நடக்கக் கூடிய காரியமா என்றால் நிச்சயம் வீட்டில் உள்ள பெரியவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் ஆனால் அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

வாழ்வில் ஒவ்வொருவருக்கும் பட்டால் தான் புரியும். எப்போதும் நாம் ஒரு வேதனையையோ, சந்தோசத்தையோ அனுபவிக்கும் போது தான் அதன் வலி தெரியும். அதுபோல் வேதனையையும், வலியையும் நான் அனுபவித்ததால் தான் என் வேதனையையும் வலியையும் உங்களுடன் பகிர்கிறேன். இதை பதிவாக்கும் போது பலர் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும் இதை படித்த ஒருவர் ஆண் அல்லது பெண் வீட்டில் இரத்தப்பரிசோதனை சான்றிதழ் கேட்டாலே என் பதிவால் பயன் தான் என்று நினைத்து எழுதுகிறேன்.

சமீபத்தில் என் நண்பன் எனக்க போன் செய்தான் எனக்கும் அவனுக்கும் 12 வருட நட்பு படிக்கும் போது நட்பு ஏதாவது நிகழ்ச்சி எனில் அவன் வீட்டுக்குச் செல்வேன். அவனுக்கு அம்மா இல்லை சித்தி தான். நாங்கள் எப்போது வீட்டுக்கு சென்றாலும் எங்களையும் மகன் போல் தான் பாப்பங்க அவங்க சித்தி அவன் சொல்வான் எங்க அம்மா இருந்தாக் கூட என்னை இப்படி பார்த்து இருப்பாங்களா என்பது சந்தேகம் அப்படி பார்க்கின்றார்கள். சித்தியின் மகள் நாங்கள் அவன் வீட்டிற்கு செல்லும் போது 2ம் வகுப்பு படித்தார்கள் என்று நினைக்கிறேன் அவன் அப்பா கூலி வேலைதான்.

நண்பன் என்னை அழைத்து சொன்ன விசயம் தங்கைக்கு 20 வயதில் திருமணம் முடித்தோம் மூன்று மாதம் தான் குடும்பம் நடத்தினாள் கணவனுடன் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக எங்க கூட தான் இருக்கிறோள். அவளுக்கு வேறு திருமணம் செய்ய ஏற்பாடு செய்து கொண்டு இருக்கிறேன் இந்நிலையில் அவள் முதல் கணவர் கடந்த மாதம் இறந்துவிட்டார். அவர் இறந்தது எய்ட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோயினால் என்று சொல்றாங்க தங்கை அவன் கூட வாழ்ந்ததால் தங்கைக்கு பரிசோதனை செய்யலாமா? திருமண ஏற்பாடு நடக்கிறது என்ன செய்யலாம் என்று கேட்டான் நான் நிச்சயம் இரத்தப்பரிசோதனை எதற்கும் செய்து கொள்ளலாம் என்றேன். எங்கள் ஊரில் பரிசோதனை செய்தால் ஊர் எல்லாம் தெரிந்து விடும் எனக் கூற நான் இங்கே வந்து விடு என்றேன். இங்கு பரிசோதனை செய்தோம் ஒரு பத்து வருடத்திற்கு அப்புறம் அன்றுதான் தங்கையைப் பார்த்தேன். பரிசோதனை முடித்து விட்டு 3 மணிக்கு சென்று பரிசோதனை விவரத்தைப் பார்த்தால் பாசிட்டிவ் என்று இருந்தது என் கையால் வாங்கி அதைப்பார்த்த உடன் என்ன செய்வது என்று தெரியாமல் என் கண் கலங்கியது.

நண்பனை மட்டும் அழைத்து விவரத்தை சொல்லி விட்டு தங்கையிடம் இன்னும் 2 நாள் ஆகுமாம் மும்பை அனுப்பி அதன் பின் சொல்கிறார்கள் என்று சொல்லி அனுப்பினேன் என்ன செய்வது இன்று வரை சொல்லவில்லை. புதிதாக பார்த்த மாப்பிள்ளையிடம் தங்கை உங்களை பிடிக்கவில்லை என்று கூறி அவரை வேறு இடம் பார்க்க சொல்லிவிட்டதாக சொன்னான்.

வாழ்க்கையில் மறக்கக முடியாத தருணம் அது எத்தனையோ நல்லது கெட்டது செய்திருந்தாலும் அந்த பரிசோதனை விபரத்தை என் கையில் வாங்கி கண்ணீர் விட்டதை எப்படி மறப்பது தூக்கமில்லாமல் தவிக்கிறேன் அவர்களுக்கு எப்படி உதவி செய்வது. மருந்து மாத்திரை எங்கு வாங்குவது என்று ஒவ்வொன்றாக விசாரித்துக்கொண்டு இருக்கிறேன். 22 வயதுப் பெண் ஆட்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என் நண்பன் தங்கை என்பதால் மனது அடித்துக்கொள்கிறது. இத்தனை நாள் எத்தனையோ முகம் தெரியாதவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் இப்போது தான் வலியை உணர்கிறேன். நமக்கு பக்கத்தில் நடக்கும் போது தான் உரைக்கிறது. இது போல் விபரம் தெரியாமல் இன்று நம் ஊரில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிச்சயம் இருப்பார்கள். அவர்கள் மனவலி மனவேதனை நினைத்தாலே கண்ணீர் தான்.

இனி வரும் காலங்களில் திருமணத்தின் போது பரிசோதனை சான்றிதழ் வேண்டும் என அனைவரும் கேட்க வேண்டும். நாம் கேட்கவில்லை என்றாலும் அரசாங்கம் கேட்கும் படியான சட்டம் இயற்றலாம். திருமண பதிவு சட்டம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது வரவேற்கத்தக்கது. திருமணம் பதியும் போது இருவரது உடல் பரிசோதனை சான்றிதழ் நிச்சயம் வேண்டும் என்று அரசு சட்டமியற்றினால் பல அப்பாவிகள் இந்நோயில் இருந்து தப்புவதற்கு வாய்ப்பு உண்டு...

பதிவு செய்தவர்
சங்கவி
http://sangkavi.blogspot.com/2010/08/blog-post_05.html