Tuesday, August 17, 2010

உண்மையிலேயே பெண் எதை வேண்டும் என்பாள்?

ஒரு சிற்றரசன் இருந்தான். அவன் பெயர் இளஞ்செழியன். ஆள் அசத்தலாக இருப்பான். தோற்றத்தில் திரைப்பட நடிகர் அஜீத்தைப் போல் இருப்பான். செயல்களில் திரைப்பட நடிகர் விக்ரமைப் போல இருப்பான். அத்துடன் மகா புத்திசாலி வேறு.

அவனுடைய போதாத நேரம். தன்னுடைய நாட்டையும் பறிகொடுத்து, பக்கத்து நாட்டில் இருந்த மாமன்னனிடம் சிறைப்பட நேர்ந்தது, அந்த மாமன்னன் நடந்து முடிந்த யுத்தத்திலேயே அவனைக் கொன்றிருக்கலாம். ஆனால், அவனுடைய தோற்றத்தையும், புத்திசாலித்தனத்தையும், பேச்சுத்திறமையையும் பார்த்து, அவனைக் கொல்லாமல் சிறை பிடித்துக்கொண்டு வந்துவிட்டான்.

இளஞ்செழியனின் ஜாதகத்தைப் பார்த்த, மாமன்னனின் ஆஸ்தான ஜோதிடர், அவனுடைய ஜாதகத்தில் பல யோகங்கள் இருப்பதாகவும், ஐந்து கிரகங்கள் உச்சமாக இருப்பதாகவும், அத்துடன் மகாபுருஷ யோகம் இருப்பதாகவும் கூறினார்.

அதைக்கேள்வியுற்ற மாமன்னன், அவனுக்குத் தன் ஒரே மகளை மணம் முடித்து வைக்கவும், அவன் நாட்டைத் திருப்பி அவனுக்கே கொடுக்கவும் விரும்பினான். மாமன்னனின் மகள் மிகவும் அழகாக இருப்பாள்.

மாமன்னன், அதை வெளியில் சொல்லாமல், அவனை அழைத்து அவனுக்கு ஒரு சவால் விடுத்தார். சவாலில் அவன் வெற்றி பெற்று விட்டால், அவனைச் சுதந்திரமாக விட்டு விடுவதாகவும் சொன்னார்.

என்ன சவால்?

மிகவும் கஷ்டமான கேள்வி ஒன்றிற்கு, அவன் நிதானமாக யோசித்து நல்ல பதிலை - சரியான பதிலைச் சொல்ல வேண்டும். அத்துடன் அதை யோசித்துச் சொல்ல, அல்லது பல இடங்களில் விசாரித்துத் தக்க பதிலைச் சொல்ல கால அவகாசமும் கொடுத்தார். ஒரு வருட காலம் அதற்கு அவகாசம். அந்த காலகட்ட்டத்திற்குள் அவன் சரியான பதிலைச் சொல்லாவிட்டால், இறக்க நேரிடும் என்பதையும் நிபந்தனையாக்கிச் சொன்னார்.

உயிரா? தக்க பதிலா? அதுதான் சவால்!

சரி, கேள்வி என்ன?

“உண்மையிலேயே பெண் எதை வேண்டும் என்பாள்?” அதுதான் கேள்வி
The question was: What do women really want?

பெண்கள் மனதைப் புரிந்து கொள்ள முடியாது என்று சொல்லப்படும் சொல்லடைக்கு மாமன்னன் விடைகாண விரும்பினான். அதனால்தான் அந்தக் கேள்வி.

பெண்ணிற்கு உண்மையிலேயே என்ன வேண்டும்? எது கொடுக்கப்பட வேண்டும்? எதைக் கொடுத்தால் அவள் அதிகம் மகிழ்வாள்? அத்துடன் நிரந்தரமான மகிழ்வு கொள்வாள்? எப்படி வேண்டுமென்றாலும் நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.

பெரிய ஞானிகளால் கூடப் பதில் சொல்ல முடியாத கேள்வி இது. இளம் வயதினான இளஞ்செழியன் இதற்கு எப்படிப் பதில் சொல்வான்?

எப்படியும் பதில் சொல்லியாக வேண்டும். உயிர் பிழைக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறதே. ஆகவே மாமன்னனின் சவாலை இளஞ்செழியன் ஏற்றுக் கொண்டான்.

அவன் தன் நாட்டிற்குத் திரும்பினான். பலரையும் சந்தித்துப் பேசலுற்றான். ஞானிகள், சாஸ்திரங்களை அறிந்தவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், நீதிபதிகள் என்று ஒருவரையும் விட்டு வைக்காமல் பலரிடமும் பேசிப் பார்த்தான். ஆனால் யாரிடம் இருந்தும் ஒரு திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை.

ஆனால், சில பெரியவர்கள், அவனுக்கு ஒரு நல்ல யோசனையைச் சொன்னார்கள். நகரத்தின் கோடியில் வசித்துக்கொண்டிருக்கும் சூனியக்காரியைப் போய்ப் பார்க்கச் சொன்னார்கள். கண்டிப்பாக அவள் தகுந்த பதிலையும் சொல்வாள் என்று அவனுக்கு நம்பிக்கையையும் கொடுத்தார்கள்.

அவளை நமது நாயகனும் அறிவான். அவளுடைய கட்டண விகிதங்கள் யாராலும் தாக்குப் பிடிக்க முடியாது. அந்த அளவிற்கு இருக்கும். அதனால் அவளைப்போய்ப் பார்ப்பதற்கு நமது நாயகனும் விருப்பவில்லை.

மாமன்னன் கொடுத்திருந்த காலக் கெடுவும் முடிவிற்கு வரும் நிலையில் இருந்தது. இன்னும் ஒருநாள் மட்டுமே பாக்கியிருந்தது.

வேறு வழியின்றி, அவளைப் பார்த்துப் பேசினான். தன்னுடைய கேள்வியையும் சொன்னான். அவள் சரியான பதிலைச் சொல்வதற்குச் சம்மதித்ததோடு, அதற்குரிய விலையையும் சொன்னாள். அந்த விலக்கு அவன் சம்மதித்தால், பதில் கிடைக்கும் என்றாள்.

என்ன விலை?

நாயகன், தன்னுடைய நெருங்கிய நண்பன் நந்திவர்மனை தனக்கு மணம் முடித்து வைக்க வேண்டுமென்றாள்.

நாயகன் அதிர்ந்து போய்விட்டான்.

அழகு, வீரம், இளமை, கெட்டிக்காரத்தனம் அத்தனையும் கொண்ட தன் நண்பன் நந்திவர்மனைச் சூனியக்காரி யிடம் பலி கொடுக்க அவனுக்கு விருப்ப மில்லை. அதைவிட உயிரை விடுவதே மேல் என்று முடிவுகட்டினான்.

திரைப்பட நடிகர் கார்த்திக் போன்ற தோறத்துடன் இருக்கும் அவனுடைய நண்பன் எங்கே? அழுக்குப் பிடித்த இந்தச் சூனியக்காரக் கிழம் எங்கே?

சூனியக்காரியைப் போன்ற இழிபிறவியை - அசிங்கத்தின் மொத்த உருவை அவன் இதுவரை பார்த்ததே இல்லை. தன் நண்பனை அநியாயமாகப் பலி கொடுக்கவும் விரும்பவில்லை. ஆகவே முடியாது என்று கூறிவிட்டுத் திரும்பி விட்டான்.

விதி வேறு விதமாக விளையாடியது. சூனியக்காரியின் வீட்டு வாசலில் காத்துக்கொண்டிருந்த நண்பன், சூனியக்காரியின் கோரிக்கையைக் கேட்டு, தன் நண்பனின் உயிரைக் காப்பாறுவதற்காக, அவளை மணந்து கொள்ளச் சம்மதிப்பதாகக் கூறியதோடு, தன் நண்பனுடன் மீண்டும் சூனியக்காரியின் மாளிகைக்குள் சென்று அவளுடன் பேசலுற்றான்.

இளஞ்செழியனின் உயிரைவிட அது ஒன்றும் பெரியதல்ல என்றான்.

இருவரும் சென்று சூனியக்காரியிடம் பேசினார்கள். சம்பந்தப் பட்டவனே நேரில் வந்து, தன்னை மணக்கச் சம்மதம் தெரிவித்தவுடன், சூனியக்காரி அதீத மகிழ்ச்சி கொண்டாள்.

அத்துடன் ஒரு ஆண்டாக அவர்கள் தேடிக்கொண்டிருந்த (கேள்விக்கான) சரியான பதிலையும் சொன்னாள்.

என்ன பதில்?

கேள்வியை மீண்டும் நினைவு கூறுங்கள்:

கேள்வி: “உண்மையிலேயே பெண் எதை வேண்டும் என்பாள்?” The question was: What do women really want?

அவள் சொன்ன பதில்: 'A woman wants to be in charge of her own life.'

ஆமாம், “ஒரு பெண் தனக்குத்தானே எல்லாமுமாக இருக்க வேண்டும் என்று நினைப்பாள்.” ஆசைப்படுவாள்.

அதுதான் சரியான பதில்

செய்தி நாடு முழுவதும் பரவியது. அனைவரும் அதை ஒப்புக்கொண்டார்கள். சூனியக்காரி ஒரு பெரிய உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறாள் என்று பலரும் பேசிக்கொண்டார்கள். பல பெண்களும் அதை சிலாகித்துப் பேசினார்கள்.

மாமன்னன் இந்தச் சரியான பதிலால் மகிழ்வுற்று, இளஞ்செழியனுக்கு, விடுதலை அளித்ததோடு, அவனுடைய நாட்டையும் திருப்பிக்கொடுத்தான்.

வாக்குத்தவறாமல், அந்த சூனியக்காரிக்கான விலை கொடுக்கப்பட்டது. ஆமாம், இள்ஞ்செழியனின் நண்பனுக்கும் அந்த சூனியக்காரிக்கும் திருமணம் விமரிசையாக நடைபெற்றது.

அடுத்து நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் நந்திவர்மனின் முதல் இரவும் வந்து சேர்ந்தது. ஒரு பயங்கர அனுபவத்தை எதிர்கொள்ளும் முகமாக, நந்திவர்மனும் தன் மனதைத் தேற்றிக் கொண்டு, முதல் இரவு நடக்க இருக்கும் அறைக்குள் நுழைந்தான்.

அடடா, என்ன ஒரு அற்புதமான காட்சி?

அவன் இதுவரை பார்த்திராத அழகு தேவதை ஒருத்தி படுக்கையில் அமர்ந்திருந்தாள். அவன் சொக்கிப்போகும் விதமாகப் புன்னகை ஒன்றையும் உதிர்த்தாள்.உங்கள் மொழியில் சொன்னால், தமன்னாவைப் போன்ற தோற்றமுடைய பெண் படுக்கையில் அவனை எதிர் கொண்டாள்.

எப்படி இருக்கும்?

மயங்கி விழாத நிலையில் நந்திவர்மன்.

“என்ன நடந்தது?” என்று நந்திவர்மன் வினவ தேவதையாக மாறியிருந்த சூனியக்காரி பேசலுற்றாள். தான் சற்றும் அழகில்லாதவள் என்று தெரிந்தும் தன்னை மணந்து கொண்ட நந்திவர்மனின் அன்பிற்கும், வீரத்திற்கும், நல்ல மனதிற்கும் பரிசாகத் தான் இந்த வடிவத்திற்குத் தன்னை மாற்றிக் கொண்டு விட்டதாக அவள் இனிய குரலில் தெரிவித்தாள்.

அத்துடன் அவள் சொன்னாள். தான் பாதி நேரம் தன் பழைய தோற்றத்துடனும், பாதி நேரம் இந்தத் தோற்றத்துடனும் இருந்தாக வேண்டும் என்றும் சொன்னாள்.

“நான் பகலில் அழகாக இருக்க வேண்டுமா? அல்லது இரவில் அழகாக இருக்க வேண்டுமா? உங்கள் விருப்பத்தைச் சொல்லுங்கள்!” என்று கேட்கவும் செய்தாள்.

நந்திவர்மன் சற்று சிந்தனை வயப்பட்டான்.

“பகலில் இவள் அழகாக இருந்தால், தன்னுடைய உறவினர்களும், நண்பர்களும் வந்து செல்ல முடியும். அதே நேரத்தில் இரவு நேரங்களில் இத்தனை பெரிய மாளிகையில், இவளுடைய சூனியத்தன்மை அச்சுறுத்துவதாக இருக்கும். ஆனால், பகலில் எப்படியோ இருந்துவிட்டுப் போகிறாள், இரவில் இவள் இளமையாகவும் அழகாகவும் இருந்தால்தான் தன்னால் மகிழ்சியாக இருக்க முடியும். வாழ்க்கையையும் அனுபவிக்க முடியும்” என்ற இரு வேறு சிந்தனைகள் அவன் மனதில் தோன்றி மறைந்தன.

இந்தக் கதையைப் படிக்கும் நீங்கள் அந்த இடத்தில் இருந்தால், உங்கள் சாய்ஸாக எதைச் சொல்வீர்கள்?

இந்தக் கதையைப் படிக்கும் நீங்கள் பெண்ணாக இருந்தால், உங்கள் கணவனின் சாய்ஸ் எதாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்?

நன்றாக யோசித்து ஒரு முடிவிற்கு வாருங்கள்.

கதையின் முடிவு கீழே இருக்கிறது. அத்துடன் உங்களின் முடிவு ஒத்துப்போகிறதா என்று பாருங்கள்

நந்திவர்மன் என்ன சொன்னான் என்பதைவிட, நீங்களாக இருந்தால் என்ன சொல்லியிருப்பீர்கள் என்பதுதான் முக்கியம். ஆகவே தீர்க்கமாக அதை முடிவு செய்து விட்டு, பக்கத்தைக் கீழே இறக்கிப் பாருங்கள் (scroll down)

ஓக்கேயா?

V

V

V

V

V

V

V

V

V

V

V

V

V

V

V
நந்திவர்மன் கெட்டிக்காரனல்லவா? “உண்மையிலேயே பெண் எதை
வேண்டும் என்பாள்?” என்ற கேள்விக்குப் பதிலாகத் தன் மனைவி
தன் நண்பன் இளஞ்செழியனுக்குச் சொன்ன பதில் அவனுக்குத் தெரியுமல்லவா? அதனால், “உன் விருப்பத்திற்கே அதை விட்டு
விடுகிறேன். உன் விருப்பப்படி நீ எப்படி இருந்தாலும் எனக்குச்
சம்மத்மே” என்றான்.
I would allow YOU to make the choice on your own!

அந்தப் பதிலைக் கேட்டு மிகவும் மகிழந்தவள், “என்னை மதித்து நீங்கள் இதைச் சொன்னதால், என் வாழ்க்கைக்கு நானே முடிவெடுக்க வேண்டும் என்று சொன்னதால், நான் இன்று முதல் இப்புதிய தோற்றத்துடனேயே உங்களுடன் எப்போதும் இருக்கப்போகிறேன்!

கதை எப்படி உள்ளது?

கதையின் நீதி என்ன?

There is 'witch' in every woman. If you respect her and allow her to be in charge of her own life, she will become an ANGEL!

ஓக்கேயா?

பதிவு செய்தவர்
SP.VR. SUBBAIYA
http://classroom2007.blogspot.com/2010/08/short-story.html


1 comment:

Venkatesh prabu said...

Nice Story Baki. I got a nice message Today from yor Blog spot.
thank you

Post a Comment