Wednesday, November 17, 2010

Airtel அடித்த முதல் ஸ்பெக்ட்ரம் கொள்ளை!!

பிரமோத் மகாஜன் தொலை தொடர்பு மந்திரியாக பிஜேபி ஆட்சியில் இருந்த போது என்ன முறை பின் பற்ற பட்டதோ அதே முறைதான் இப்போது பின்பற்றப்பட்டுள்ளது..என கலைஞர் திருவாய் மலர்ந்துள்ளார்...அது என்ன முறை...?

2ஜி அலைவரிசை முதன் முதலில் ஒதுக்கப்பட்டபோது airtel பிரமோத் மகாஜனை அணுகியது..போட்டியில்லாமல் எங்களுக்கே அலைவரிசையை கொடுத்து விடுங்கள்..வருடத்திற்க்கு 300 கோடி என எடுத்துக்கொள்கிறோம்...என கேட்டது...பிரமோத் தும் அள்ளி கொடுத்தார்

2021 வரை இந்த லைசன்ஸ்உரிமை செல்லும்..இதற்கு கைமாறாக பிரமோத்துக்கு 5000 கோடி கொடுக்கப்பட்டது...airtel life time ல் 2021 என வரும்..பார்த்திருப்பீருப்பீர்கள்..அது அதன் லைசன்ஸ் காலத்தை குறிக்கிறது.
அதே 3ஜி அலைவரிசையை இப்போது அதெ கம்பெனி 30,000 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது என்றால் airtel அடித்த கொள்ளை எவ்வளவு என கணக்கு போட்டு பாருங்கள்..இது வருடம் ஒன்றிற்கு மட்டுமே..airtel மளமள வென முன்னேறி இந்தியாவின் தொலை தொடர்பில் முதலிடத்தில் பிடிக்க இது ஒரு முக்கிய காரணம்...

5000 கோடி அவர் வாங்கியது அனைத்து மீடியாவிற்க்கும் தெரியும் ...எதிர்கட்சியாய் இருந்த காங்கிரஸ்க்கும் தெரியும்..போபர்ஸ் ஊழல் பற்றி பிஜேபி மீண்டும் மீண்டும் ஊதி பெரிதாக்கி காங்கிரசை பிஜேபி முடக்கி வைத்திருந்த காலம் அது...அப்போது காங்கிரஸ் வாய் மூடி நின்ற பலனை இன்று அனுபவிக்கிறது..காங்கிரஸ் ..அன்று சும்மா இருந்த மீடியாக்களும் இன்று ஸ்பெக்ட்ரமை ஊதி பெரிதாக்குவதின் காரணம் வட இந்திய மீடியாக்கள் கலைஞரை வெறுப்பதே காரணம்...

பார்ப்பனர்களை கடுமையாக எதிர்த்து அரசியல் செய்பவர் ..20 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியை பெற்றவர் என்பதால்...வட இந்திய மீடியாக்களும்..வட இந்திய எம்.பி க்களும்..சில காங்கிரஸ் எம்.பி.க்களும் தி.மு.க வை ஒழிக்க முயற்சிக்கின்றன..அதற்கு அல்வாவாக கிடைத்ததுதான் ராசா மேட்டர்
இன்றும் கூட..சூத்திரனுக்கு ஒரு மரியாதை ..பார்பனுக்கு ஒரு மரியாதையோ என பாரதியின் வரிகளை எடுத்துப்போட்டு ஜெயலலிதாவை வறுத்து எடுத்திருக்கிறார் கலைஞர்..இது போன்ற அறிக்கைகளால்தான்..,பார்ப்பன பத்திரிக்கைகளான..இந்து,இந்தியன் எக்ஸ்பிரஸ்,ஜூனியர் விகடன்,இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்றவை ஸ்பெக்ட்ரமை செமையாக ஊதின...தி.மு.க வின் இமேஜை காலி செய்தன.ஜுனியர் விகடன் மட்டும் 2007 முதல் 12 கவர் ஸ்டோரிகள் ஸ்பெக்ட்ரம் பற்றி வெளியிட்டுள்ளன..

ராசா பிரமோத் போல அடித்திருந்தால் பரவாயில்லை...ஆனால் இந்த மனுசன் மனைவியின் பினாமி பெயரில் ஒரு கம்பெனி ஆரம்பித்து ...அதற்கு லைசன்ஸ் கொடுத்து அது பங்குகளை வெளியிட வைத்து எதிர்காலத்தில் டவர்கள் அமைத்து சிம் கொடுத்து வியாபாரம் செஞ்சி..வருசம் பத்தாயிரம்,இருபதாயிரம் கோடிகள் லாபம் கிடைக்கும் படி செய்யலாம்னு நினைச்சார் போல....இந்த அகலகால் காலை வாரி விட்டது.

ராசா பிரமோத் போல நேரிடையாக பணம் அள்ளவில்லை..1,70,000 கோடி மொத்தமாக அவர் அடிக்கவில்லை என்பது மீடியாக்களுக்கு நன்கு தெரியும்..ஆனாலும் அதை பற்றி முச்சு விடவில்லை..அவ்வளவு பணத்தையும் அவரே ஊழல் செய்து சென்னைக்கு கொண்டு வந்து விட்டார் என்பதை போலவே மாயத்தோற்றம் எழுப்புகின்றன...மீடியா என்பது தனி அரசாங்கம்..தனி சிஐடி பிரிவு போல..எப்போதோ மாறி விட்டது...அவை நினைத்தால் யாரையும் கவிழ்க்க முடியும் என்பதற்கு இந்த விவகாரம் ஒரு உதாரணம்....

ராசாவுக்காக கனிமொழி மட்டுமே எல்லோரிடமும் கடைசி வரை சமாதானம் செய்தாராம் ...தந்தையிடம் கெஞ்சினாராம்..ஆனாலும் உதட்டை பிதுக்கி விட்டாராம் கலைஞர்..பாவம் கனி.
.
ராசா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள.....
பிரமோத் 5000 கோடி அடித்து விட்டு கால் மேல் கால் போட்டுக்கொண்டு பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்....அவரது உருப்படாத தம்பி வருகிறார்..அண்ணா நீதான் 5000 கோடி அடித்து விட்டாயே, எனக்கு ஒரு 50 கோடி கொடு.. நான் தனியாக பிசினஸ் செய்கிறேன்..என்றாராம்...

பிரமோத் கோபத்துடன்,அதெல்லாம் உனக்கு ஒத்து வராது..ரிலையன்ஸ் கிட்ட சொல்லி இருக்கேன்..மேனேஜர் வேலை போட்டு தருவாங்க..மாசம் 40,000 ரூபா சம்பளம் தர சொல்லி இருக்கேன்..ஒரு ஃப்ளாட் வாங்கி தரேன்..போய் ஒழுங்கா வேலை செஞ்சிட்டு இரு என்றாராம்..

தம்பி உடனே துப்பாக்கி எடுத்து 5000 கோடி சம்பாதிச்சும், உன் கஞ்சத்தனம் போகலையே என்ற்படியே சுட்டாராம்..
மொத்தம் பத்து குண்டுகள்...
கொழுந்தனுக்கு காபி தயாரித்து சூடாக கொண்டு வந்த பிரமோத் மனைவியிடம்,,
பாருங்க அண்ணி என்னை வேலைக்கு போக சொல்றாரு..இந்த மயிரு வேலைக்கு எனக்கு போக தெரியாதா..இவர் இவ்வளவு பணம் வெச்சிருந்தும் நான் வேலைக்கு போகணுமாம்..அதான் சுட்டேன்...என்றாராம் கூலாக..


சிவன் சொத்து குல நாசம்...இந்தியா ஆன்மீக பூமி...மக்கள் வரிப்பணம் என்பது..சிவன் சொத்து..அதை கொள்ளை அடிப்பவர்கள் யாராய் இருந்தாலும் அகால மரணமடைவார்கள்..அல்லது அவரது வாரிசுகள் பதவிக்காக சண்டை போட்டு மண்டை உடைத்துக்கொள்வதை பார்த்துக்கொண்டே நெஞ்சை பிடித்துக்கொண்டு அய்யோ கொல்றாங்களே என்றபடியே சாவார்கள்..

Thanks
http://sathish777.blogspot.com/2010/11/airtel.html

1 comment:

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

More Entertainment

www.ChiCha.in

Post a Comment