Friday, October 15, 2010

இந்தநாளும் இனிய நாளே !

இன்று தலைகுனிந்து படிப்பதெல்லாம்
நாளை தலைநிமிர்ந்து நடப்பட்ப்பதற்கே...
இன்று பெற்றோர் இகழ்வதெல்லாம்
நாளை மற்றொர் புகழ்வதற்கே...
இன்று முகம் கவிழ்ந்து போவதெல்லாம்
நாளை முகம் மலர்ந்து வாழ்வதற்கே...
இன்று வலியாய் இருப்பதெல்லாம்
நாளை சிலையாய் மாறுவதற்கே...


நன்றி:எழுதியவருக்கு

இந்த உலகில் தனித்திறமை உள்ளவர்கள் மட்டுமே ஜெயிக்க இயலும்.

தனித்திறமை என்பது தன்னைப் புரிந்துக் கொள்ளுதல், அனைவரிடமும் உள்ள சிறப்பு பண்புகளை (Plus Points) உற்று நோக்கி; அதனை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளுதல், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஒருவாறு யூகித்தல், வார்த்தைகளின் முக்கியத்துவத்தை உணர்தல், இவையனைத்திறகும் மேலாக நம்பிக்கை.

படி எங்கிருக்கிறது என்று தெரியாத போதும்
முதல்அடி எடுத்துவைப்பதற்குப் பெயர் தான் நம்பிக்கை!

நம்பிக்கையை பாதுகாப்பாக வைத்துக் கொண்டால், இன்று நம்மை எள்ளி நகைக்கும் இவ்வுலகம் நிச்சயம் திரும்பிப் பார்க்கும்.

இவ்வுலகில் ஏசுநாதரைப் போல் வாழ்வது என்றால் நம்மை பாதாளத்தில் தள்ளி விடுவார்கள். எனவே தேவைப்பட்டால் மறுகன்னத்தில் மட்டுமல்ல, இரு கன்னத்திலும் திருப்பி அறைய வேண்டும். "ரௌத்திரம் பழகு" என்பது பாரதியின் வார்த்தைகள். நல்லவனாக வாழுதல் தவறல்ல. நல்லவனாக மட்டும் வாழ்தல் என்பது இன்றைய சூழலில் " பிழைக்கத் தெரியாதவன்" என்ற பட்டத்தை பெறுவதற்கு மட்டுமே உதவும்.

நமது சுற்று வட்டாரம் எப்படிப்பட்டது, நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் திறம், என்பவையும் முக்கியம். இவை சமுதாயத்தால்மதிக்கப்படக்கூடியநிலையை உருவாக்கும்.

வாழ்க்கையின்இறுக்கம் தாண்டி, நல்ல விஷயங்களை ரசிக்கும் மனதையும் பெற்று விட்டால் இனி எல்லாம் சுகமே....

http://bharathbharathi.blogspot.com/2010/09/blog-post_7699.html

No comments:

Post a Comment