Thursday, October 21, 2010

கட்டுக்குள் அடக்காதே !!!


காந்தி, அவர் எழுதிய சத்திய சோதனை புத்தகத்தில் தன் வாழ்வின் நடந்த சுவையான, கசப்பான அனுபங்களை சொல்லிருக்கிறார்.

‎"காந்தி கணக்கு" என்று ஒன்று சொல்லுவாங்க யாருக்காவது தெரியுமா....காந்தி எங்கே போனாலும் கூடவே ஒரு உண்டியலை எடுத்து கொண்டு செல்வாராம்...யார் அவரை பார்கிறார்களோ அவர்களிடம் உண்டியலை நீட்டுவாராம் "முதலில் உண்டியலில் காசுபோடுங்கள் பின்பு பேசலாம்" என சொல்வாராம். ஏனென்றால் ஆதரவற்றவர்களுக்காக உதவி செய்வதற்கு நிதி திரட்டுவாராம். அவ்வாறு உண்டியலில் போடும் பணம் காந்தியிடம் சேர்ந்ததால் காந்தி கணக்காய் மாறிவிடுமாம்...நாட்டில் உள்ளவர்கள் எல்லோரும் பேச்சு வழக்கத்தில்அதுவே "காந்தி கணக்கு" என்று மாறிவிட்டது....அதவாது நீங்க எனக்கு பணம் கொடுத்தால் திரும்பி வராது அது "காந்தி கணக்காய்" என்று இருக்கும்.

காந்தி சொல்கிறார். "தான் பகலில் பிரமச்சரியத்தை கடைபிடிக்கிறேன் ஆனால் என் கனவில் பிரம்மச்சரியம் இல்லாமல் இருக்கிறேன். என்று துணிந்து உண்மையை சொல்லிருக்கிறார். அவர், "உண்மையிலே நமக்கு காம ஆசை போய்விட்டதா..." என சந்தேகம் கொண்டு அவர் உறங்கும் போது இரு பெண்களை தன்னுடன் உறங்க சொன்னாராம்...அவர்கள் யார் என்றால் எப்போதும் காந்தியுடன் செல்பவர்கள் காந்தியின் கைகளை சுமப்பவர்கள்...அப்பெண்களை ஒருநாள் தன் பக்கத்தில் உறங்கவைத்து இவரும் உறங்கிவிட்டாராம்...நடுஇரவில் இவருக்கு காம உந்துதல் அதிகமாக இருந்ததாம்...அப்பொழுதுதான் உணர்ந்தாராம் நாம் வெளியில் காமத்தை மூடிமறைக்கிறோம் ஆனால் அவ்வுணர்வு நம்மிடம் இருப்பது அப்படியேதான் இருக்கிறேன். என்று நினைத்து அந்நாள் முதல் கடுமையான விரதம் மேற்கொண்டாராம்...

இன்னொரு சம்பவம். காந்தியின் அம்மா இறந்தபோது அவர் உடல் அருகே எல்லோரும் அழுது கொண்டிருந்தார்களாம்...அப்போது காந்தி மனைவி கஸ்துரிபாய்யும் தன் மாமியார் உடல் அருகே அழுதுகொண்டிருந்திருக்கிறார்..அப்போது காந்தி, தன் மனைவி கஸ்தூரிபாயயை பார்த்தவுடன் இவருக்கு காம இச்சை வந்துவிட்டதாம் ...அப்போது "தன் மனைவி பேரழகியாக இருக்கிறாலே இவளுடன் உடலுறவு வைத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆவல் எனக்கு வந்தது. பின்பு மனைவியை சாடையாய் அழைத்து வீட்டில் உள்ள ஒரு அறையில் தன் இச்சையை தீர்த்துகொண்டேன். அப்போது ஏற்பட்ட உறவில் மூலம் பிறந்தவன்தான் தேவதாஸ்" அப்போது ஏற்பட்ட கசப்பான நிலையில் என் சந்தோசத்திற்காக மனையுடன் உடலுறவு வைத்ததால் எனக்கு தேவதாஸ் என்ற மகன் பிறந்து அவன் நாளடைவில் குடிக்கு அடிமையாகி இறந்தே விட்டான்" என்று சொல்கிறார். இவ்வாறு சத்திய சோதனை புத்தகத்தில் தன் வாழ்வின் நடந்த உணமையை மறைக்காமல் சொல்லிருக்கிறார். உணமையை மறைக்காமல் சொன்ன காந்தியை நிச்சயம் பாராட்டலாம்...

நன்றி குரு
http://rkguru.blogspot.com/2010/10/blog-post.html

No comments:

Post a Comment