Friday, October 8, 2010

எந்திரன் தெளிவான முழுநிளத்திரைப்படம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9lU17-M0-gzhw3TWzd8tUfcgWT9imMxYStjI_16cCmREtKVyM4OwDl2msLyIrIBEZ4yNoFXX2caqY2uKPsyW_NbvZf3Y4IqK1V4MBEV7weTuK6JesSwP_hZgdMmcrfcfI4POqTeH2mI0V/s1600/enthiran.jpg

படம் பார்க்க இங்கே சொடுக்கவும்

http://v.youku.com/v_show/id_XMjEyMjM1MzM2.html

சவுக்கு எந்திரன் படத்தை இணையத்தில் தான் தரவிறக்கம் செய்தது. ஆகையால், அனைத்து தோழர்களும் இணையத்தில் தரவிறக்கம் செய்து பார்க்குமாறும், சவுக்கு அன்புடன் வேண்டுகிறது.

உங்களால் முடிந்த ஒரு நாலு பேரை எந்திரன் படத்தை தியேட்டரில் பார்க்காமல் தடுத்தீர்களேயானால், அதுவே தமிழ் கூறும் நல்லுலகிற்கு நீங்கள் செய்யும் மிகப் பெரிய சேவை.



எங்கு பார்த்தாலும் எந்திரன் கோஷம்! திருட்டு விசிடியா? குண்டர் சட்டம்!!

நீதிதேவன் மயக்கம். அறிஞர் அண்ணா எழுதிய நாடகம். அந்த நாடகத்தை அறிஞர் அண்ணா என்ன நினைத்து எழுதினாரோ.. இன்று அது உண்மையாகி விடுமோ என்று அஞ்ச வைக்கிறது. கேடி சகோதரர்கள் என்று அழைக்கப்படும், கலாநிதி மற்றும் தயாநிதி ஆகியோர், கருணாநிதியை விட எப்படி மிகப் பெரிய தீயசக்தி என்று சவுக்கு ஏற்கனவே ஒரு பதிவில் எழுதியிருந்தது. அது மீண்டும் மீண்டும் உண்மை ஆகி வருகிறது.Image

தமிழ்நாட்டில் ஏதோ ஒரு யுகப்புரட்சி நடந்து விட்டது போல, எங்கு பார்த்தாலும் எந்திரன், எந்திரன் என்ற கோஷமும், சன் டிவியை திறந்தால், எந்திரன் திருட்டு விசிடியை ரசிகர்கள் கண்டு பிடித்தனர் என்று செய்தி. இது பத்தாது என்று, மத்தியக் குற்றப் பிரிவு துணை ஆணையர் ஸ்ரீதர் வேறு பேட்டி கொடுக்கிறார். எந்திரன் திருட்டு டிவிடி விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்று. (ஸ்ரீதர் சார், நீலப்படம் விற்றால் பாயாதா சார் ?) கருணாநிதியோடு, கேடி சகோதரர்கள் பிணக்கில் இருந்த காலத்திலேயே, தமிழக அரசு நிர்வாகத்தில் பல்வேறு வேலைகளை கேடி சகோதரர்களால் செய்ய முடிந்தது. கோவையில், பைபர் ஆப்டிக் இழைகளை சன் டிவி நிர்வாகத்தார் அறுத்து எரிந்த போது, அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யுங்கள் என்று, ஒரு ஐஏஎஸ் அதிகாரி எழுதி அனுப்பிய கடிதம் குப்பையில் போடப்பட்டது. ஆனால், எந்திரன் பட சிடி விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்று ஒரு காவல் துறை அதிகாரி சன் டிவிக்கு பேட்டி கொடுக்கிறார் என்றால், எந்த அளவுக்கு, அரசு நிர்வாகத்தை மடக்கிப் போட்டிருக்கிறார்கள் என்று பாருங்கள்.Image

ஆட்டை கடித்து மாட்டைக் கடித்து மனிதனையும் கடித்தது போல, ஆட்சி நிர்வாகம், காவல்துறை என்று அனைத்து துறைகளையும் கபளீகரம் செய்து விட்டு, நீதித்துறையையும் கபளீகரம் செய்ய கேடி சகோதரர்கள் முதல் முயற்சி எடுத்திருக்கிறார்கள் என்பதையும், அதற்கு நமது நீதிமான்கள் துணை போயிருக்கிறார்கள் என்பதையும் சவுக்கு வருத்தத்துடன் பதிவு செய்கிறது.

நேற்று (செவ்வாய்) இரவு, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள Four Frames என்ற தியேட்டரில், சென்னை உயர்நீதிமன்றத்தின் 24 நீதியரசர்கள், தங்கள் குடும்பத்தினருடன், எந்திரன் திரைப்படத்தை கண்டு களித்திருக்கிறார்கள் என்ற தகவலை சவுக்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறது.

நீதிபதிகள் என்றால் அவர்களுக்கு ஆசா பாசம் இருக்கக் கூடாதா, ஏன் அவர்கள் சினிமா பார்க்கக் கூடாதா என்று கேள்வி எழும். நீதிபதிகள் சினிமா பார்க்கலாம். குடும்பத்துடன் பார்க்கலாம். ஆனால், யார் செலவில், யார் அழைப்பில் என்பதுதான் கேள்வி.

சென்னையில் மட்டும் 36 தியேட்டர்களில் எந்திரன் படம் ஓடுகிறது. தங்களின் Security Officer ம் சொன்னால், டிக்கட் எடுத்து தரமாட்டார்களா ? டிக்கட் எடுத்துப் படம் பார்க்கும் அளவுக்கு பணம் இல்லாமல் நீதிபதிகள் வறுமையில் இருக்கிறார்களா ? அப்படியே வறுமையில் இருந்தாலும், அப்படி என்ன சினிமா வேண்டிக் கிடக்கிறது?Image

Four Frames என்ற திரையரங்கம், பொது மக்கள் பார்ப்பதற்கானது அல்ல. Preview ஷோ என்றழைக்கப் படும் பிரத்யேக திரையிடலுக்கான தியேட்டர் அது. அந்தத் தியேட்டரில் நீதிபதிகளுக்கான பிரத்யேகத் திரையிடல் இருக்கிறது, நீதிபதிகள் தங்கள் குடும்பத்தாருடன் வர வேண்டும் என்று சன் பிக்சர்ஸ் சார்பில், அழைப்பிதழ் வழங்கப் பட்டதாகவும் அதை ஏற்று 24 நீதிபதிகள் குடும்பத்துடன் எந்திரன் திரைப்படத்தை கண்டு களித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சன் பிக்சர்ஸ் சார்பாக, நாளை ஏதோ ஒரு வழக்கு வருகிறதா இல்லையா என்பது அடுத்த விஷயம். இரண்டு வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக இருக்கும், மங்குணி கண்ணாயிரத்தால் இது வரை கைது செய்யப் படாத துவைக்காத சாக்ஸ் என்று பிரபலமாக அழைக்கப் படும் சக்சேனாதான் சன் பிக்சர்ஸுக்கு தலைமை அதிகாரி என்பது அந்த 24 நீதிமான்களுக்கு தெரியுமா ? அந்த இரண்டு வழக்குகளும் இன்னும் நிலுவையில் இருக்கின்றன, அப்பாவி ஆட்டோ டிரைவர்களைத் தவிர, வேறு யாருமே கைது செய்யப் படவில்லை என்பது நீதிமான்களுக்குத் தெரியுமா ? Four Frames திரையரங்கில் நீதிமான்களை வரவேற்றவர்களுள் துவைக்காத சாக்ஸும் அடக்கம் என்பது நீதிமான்களுக்குத் தெரியுமா ?

ஒரு தேடப்படும் குற்றவாளியோடு சேர்ந்து இரவுக் காட்சி பார்க்கும் இந்த 24 நீதிமான்களை என்னவென்று சொல்வது ? நம்மை யாருமே கேள்வி கேட்க முடியாது, நாம் கடவுளுக்கு நிகரானவர்கள், அதனால்தான் நம்மை “மை லார்ட்“ என்று அழைக்கிறார்கள் என்ற அகந்தை தானே காரணம் ?

யாருமே கேள்வி கேட்க முடியாது என்ற அகந்தை தானே, பாதிக்கப் படப் போகும் பெற்றோர்களை பற்றி சற்றும் நினைக்காமல், மெட்ரிகுலேஷன் மாபியா சார்பாக தீர்ப்பளிக்க தைரியம் அளித்தது ?

Imageஆனால், இதையெல்லாம் சரிக்கட்ட Judicial Standards and Accountability Bill 2010 என்ற புதிய சட்டம் வர இருக்கிறது. இதன் படி, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் அத்தனை நீதிபதிகளும், இதன் வரம்பில் வருவார்கள். ரொம்பவும் கடுமையான சட்டம் போல இது தோன்றாவிட்டாலும், எதுவுமே இல்லாமல் இருப்பதற்கு, ஏதோ ஒன்று பரவாயில்லை அல்லவா ? முதலில் இந்தச் சட்டம் வரட்டும். அதன் பிறகு, இச்சட்டத்தில் உள்ள குறைகளை சரி செய்து, செம்மையாக்குவோம்.

எந்திரன் படத்தைப் பற்றி எழுதிக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது.

அடுத்த எந்திரன் செய்தி. டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழும், தினமணி நாளிதழும், எந்திரன் என்ற திரைப்படம் எப்படி ஏகபோக முதலாளித்துவத்தை வளர்க்கிறது, சிறிய படங்கள் எப்படி இதனால் நாசமாக்கப் படுகின்றன என்று வெளியிட்ட இரண்டு செய்திகளுக்காக மன்னிப்பு கோர வேண்டும் என்று இன்று சன் பிக்சர்ஸ் சார்பாக இந்த இரண்டு நாளிதழ்களுக்கும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மறுப்பு செய்தி வெளியிடவில்லை என்றால் கிரிமினல் மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்படுமாம்.

முதலமைச்சருக்கு இருக்கும் ஆயிரம் வேலைகளை விட்டு விட்டு, குடும்பத்தினர் சகிதமாக எந்திரன் படம் பார்த்துவிட்டு, பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது சன் பிக்சர்ஸ் இப்படி படம் எடுத்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டால், அது என்னையே நான் பாராட்டிக் கொள்வது போலாகும் என்று கூறும், ஒரு பொறுப்பு வாய்ந்த முதலமைச்சர் இருக்கும் போது, கேடி சகோதரர்களுக்கு திமிருக்கு என்ன குறைச்சல் ?

இப்போது சவுக்கு மீதும் மான நஷ்ட ஈடு வழக்கு தொடரட்டும். கேடி சகோதரர்களுக்கு மானமே இல்லை. இல்லாத மானத்தை எப்படி நஷ்டப் படுத்த முடியும் என்று பதில் வழக்கு சவுக்கு தொடுக்கும். கேடி சகோதரர்களின் வரலாறு, கலாநிதிக்கும் காவேரி கலாநிதிக்கும் திருமணம் ஆன சூழல், கலாநிதியின் முதலீடுகள் உள்ளிட்ட பல்வேறு விபரங்களையும் சந்தியில் கொண்டு வந்து சவுக்கு நிறுத்தும்.

கேடி சகோதரர்களே….. உங்கள் பருப்பு பகவான் சிங்கிடம் வேகலாம். ஆனால், சவுக்கிடம், எந்த குக்கரில் வேகவைத்தாலும் வேகாது.

சவுக்கு எந்திரன் படத்தை இணையத்தில் தான் தரவிறக்கம் செய்தது. ஆகையால், அனைத்து தோழர்களும் இணையத்தில் தரவிறக்கம் செய்து பார்க்குமாறும், சவுக்கு அன்புடன் வேண்டுகிறது. உங்களால் முடிந்த ஒரு நாலு பேரை எந்திரன் படத்தை தியேட்டரில் பார்க்காமல் தடுத்தீர்களேயானால், அதுவே தமிழ் கூறும் நல்லுலகிற்கு நீங்கள் செய்யும் மிகப் பெரிய சேவை.

நன்றி : சவுக்கு.நெட்,
http://suthumaathukal.blogspot.com/2010/10/blog-post_558.html

1 comment:

சி.பி.செந்தில்குமார் said...

எப்படியோ எங்க வீட்டுக்கு ஆட்டோ வராம இருந்தா சரிதான்

Post a Comment