Saturday, September 25, 2010

பெட்ரோல் விலை எப்போ குறையும் ?


பெட்ரோல் விலை குறித்து நாளொரு செய்தி நம்மை வந்தடைகிறது .உண்மையில் பெட்ரோல் விலைதான் என்ன ?

நாம் போன்ற வளரும் நாடுகளின் முக்கிய வருமானமாக அரசு கச்சா எண்ணெய் விற்பனையில் இருந்து வரும் வரி தொகையை எடுத்துகொள்கிறது

மத்திய மற்றும் மாநில அரசுகளின் முக்கிய வருவாயாக இந்த வரிப் பணம் ,பட்ஜெட்டில் பங்கு கொள்கிறது .

கச்சா எண்ணெய்க்கு நுழைவு வரி ,மாநிலங்கள் வசூலிக்கும் சுங்கம் ,துறைமுக கட்டணம் ,
மாநிலங்கள் விதிக்கும் விற்பனை வரி ,கல்வி வரி ,மத்திய அரசின் விற்பனை வரி என்று பல வரிகள் பெட்ரோல் விற்பனை விலையை நிர்ணயிக்கின்றன .

2009-10 ஆண்டில் மத்திய மற்றும் மாநில
அரசுகளுக்கு பெட்ரோல் முலம் வந்த வருமானம் 1,83,861 கோடி

ONGC,IOC,HP,BPC இவை யாவும் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பெட்ரோல் நிறுவனங்கள் .

இந்த நிறுவனத்தில் பணிபுரியும் 15 வருடம் அனுபவம் பெற்ற சாதரணமாக தொழிலாளியின் வருட சம்பளம் எட்டு லட்சம் ,டிகிரி முடித்த டிரைவர் சம்பளம் வருடத்திற்கு 22 லட்சம்,5 வது படித்த ஒரு பராமரிப்பாளர் சம்பளம் 7 லட்சம் .


அது போக மாதத்தில் தொடர்ச்சியாக 15 நாட்கள் மட்டுமே வேலை .

தற்போது கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யபடுகிறது .

இனி வரும் காலங்களில் பெட்ரோல் விலை குறைவு என்பது கனவில் மட்டுமே சாத்தியம் .

2 comments:

jothi said...

//டிகிரி முடித்த டிரைவர் சம்பளம் வருடத்திற்கு 22 லட்சம்//

நீங்கள் எழுதுவது போலவெல்லாம் கொடுப்பது இல்லை,.. என் பல நண்பர்கள் ONGCயில் வேலை பார்க்கிறார்கள். எல்லாரும் chemical engineering முடித்துவிட்டு Sr. Engineer, Asst Manager levelல் உள்ளவர்கள். நீங்கள் சொன்ன சம்பளம் எல்லாம் கிடையாது. 15 வருடம் வேலை பார்க்கும் என் நண்பனின் சம்பளமே வருடம் 12 லட்சம்தான்.

அவருக்கு கீழே வேலை பார்க்கும் டிரைவர் எப்படி அவ்வளவு சம்பளம் வாங்க முடியும்.

பெட்ரோல் விலை குறைய ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது மாற்று எரிபொருள் (Alternate energy source,..) கண்டுபிடிப்பதுதான்,..

பலனுள்ள பதிவு நண்பரே

கோவில்பட்டி ராஜ் said...

நண்பரே இன்று இந்தியாவில் அதிக சம்பளம் கொடுத்து பணியமர்த்தும் துறை பெட்ரோலியம் மட்டுமே!

Post a Comment