Monday, September 27, 2010

உங்களுக்கு எதற்கு மூலையும்? இதயமும்?

உங்களுக்கு எதற்கு மூலையும்? இதயமும்?
அயோத்தியில் ஒரு கோயில் கட்டிவிடுவதால் ராம ராஜ்ஜியம் வந்து விடும் என்று நம்புவதற்கு எதற்கு மூலை? ஒரு மனிதன் போட்டுயிருக்கும் சட்டை காவியா? பச்சையா அல்லது வெள்ளையா என்று மட்டும் பார்பவர்களுக்கும்
தனக்கும், தன் மதத்திற்கு எதிரான அந்த நிற சட்டையை அணிந்ததற்காகவே அவனை கொலை செய்ய துணிபவர்களுக்கு எதற்கு இதயம்?


வரலாறு முழுக்க மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் நடத்தபட்ட போர்களும் இழந்த பல கோடி உயிர்களும் போதாதா? இன்னும் அடங்கவில்லையா அந்த வெறி... மனித தவறுக்கு கடவுளை காரணம் ஆக்காதே என்று சொன்னால், பதில் சொல்லுங்கள், பம்பாய் கலவரங்களில் இஸ்லாமியர்களை தேடி தேடி கொன்று குவித்தார்களே இந்து வெறியர்கள், அப்போது ஏன் ராமன் வேடிக்கை பார்த்து கொண்டுயிருந்தான்?, அல்லா இஸ்லாமியிர்களை ஏன் காபாற்றவில்லை? அல்லது அப்படி தன் சக மனிதனை கொடுரமாய் கொலை செய்ய தூண்டிய அந்த எண்ணத்தை படைத்தவர் யார்? ராமனா?, நீங்கள் சொல்லலாம் அந்த எண்ணம் சுயநலம் கருதி இன்னோரு மனிதன் விதைத்தது என்று அப்போது அவனுக்குள் அதை விதைத்தது? இப்படியே போனால் அந்த முதல் விதை யார் உருவாக்கியது? சாத்தான் என்றால்? சாத்தானை படைத்தது யார்? பதில் சொல்லுங்கள்....

எல்லாம் வல்ல கடவுள் ஏன் நன்மையை மட்டுமே படைத்திருக்கலாமே தீமையையும் ஏன் படைத்தார்?

சரி! நாம் எல்லோரும் இந்துகள், "ஹரிஜன்" என்றால் கடவுளின் குழந்தை என்று சொல்லிவிட்டு அவர்களை கருவரைக்குள் அனுமதிக்காது தடுப்பது எது? சாதி திமிரா? ஆதிக்க மனோபவமா? பக்தியா?
இன்னும் கொடுமை 500 ரூபாயை விட்டு எறிந்தால் அதை பொருக்கி கொண்டு கடவுள் சிலையை கட்டிபிடிக்க அனுமதிக்கும் உங்கள் கோயிலின் நிலை தான்...

இதையும் மிஞ்சும் வகையில் கருவரையில் சாந்திமுகூர்த்தமே நடத்திவிட்ட பிறகும் எப்படி வாய் கூசாமல் சொல்லுகிறீர்கள், அங்கு கடவுள் இருக்கிறார்; அது புனிதம்; அங்கு பூநூல் போட்டால் மட்டும் தான் உள்ளே வர வேண்டும் என்று.

ஏற்கனவே இருக்கின்ற கோயில்களே இந்த இழிநிலை என்றான போது, எதற்கு இன்னோர் கோயில் அதுவும் அயோத்தியில் என்ன சாதிக்கபோகிறீர்கள் அதை கட்டிவிட்டு, அதை கட்டி முடித்தவுடன் இந்தியாவின் வருமை ஒழிந்துவிடுமா? சமதர்மம் பிறந்துவிடுமா? இல்லை மனிதர்கள் தான் சுயநலம் விட்டுவிடுவார்களா? எதுவும் நடக்கபோவதில்லை அப்புறம் எதற்கு இந்த ஆர்பாட்டம்? இது புதிதாய் கெட்டப்படும் தேவாலயங்களுக்கும் மசூதிகளுக்கும் பொருந்தும் தானே?

உங்கள் மூலை கொண்டு கொஞ்சம் சிந்தியுங்கள் எவ்வளவு முட்டாள்தனமான மூடநம்பிக்கைகள் உங்கள் மீது திணிக்கபட்டுயிருக்கிறது என்று புரியும், கொஞ்சம் உங்கள் இதயத்தோடு பேசி பாருங்கள் அது சொல்லும், ஒரு முதியோர் இல்லத்தில் ஒரு அரை மணி நேரம் அந்த வயது முதிர்ந்த குழந்தைகளோடு பேசிவிட்டு வரும் நிம்மதி ஒரு நாள் முழுக்க கோவிலிலோ, தேவாலயங்களிலோ, மசூதிகளிலோ இருந்தாலும் கூடக் கிடைக்காது என்று.

நம் முன்னே அன்பும், அரவணைப்பும் வேண்டி ஆயிரமாயிரம் முதியவர்கள் இருக்கிறார்கள்,

நல் கல்வி அறிவு வேண்டி பல லட்ச குழந்தைகள் இருக்கிறார்கள்,

உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து போனது தவிர ஒன்றுமே கிடைக்காத கோடான கோடி உழைக்கும் மக்கள் இருக்கிறார்கள் விடியல் வேண்டி...

சிந்தித்து பாருங்கள் நண்பர்களே! நாம் கட்டவேண்டியது புதிய கோயில்களையா? சிந்திக்க கற்று தரும் பள்ளிகளையா?

ஒன்று கடவுளை மறந்துவிட்டு, மானுடத்திற்காக போராடுங்கள் அல்லது மூடநம்பிக்கைகளும், போலி சம்பிராதயங்களும்,மத சாயங்களும்
நீக்கி அன்பின் ஊடாகவும் அறிவியல் ஊடாகவும் கடவுளை தேடுங்கள்....

அதை விடுத்து மூடநம்பிக்கைகளில் மூழ்கி உங்களையும் கடவுளையும் சிறுமை படுத்தாதீர்கள்.

இல்லை இல்லை நான் சிந்திக்க மாட்டேன் என் தாத்தா இப்படி தான் இருந்தார், என் அப்பாவும் இப்படி தான் இருந்தார் அதனால் நானும் இப்படி தான் இருப்பேன் என்றால் ஒப்புக்கொள்ளுங்கள் உங்களுக்கு மூலையும் இதயமும் தேவையில்லை என்று!!!

நன்றி :http://adangatamizhan.blogspot.com/2010/09/blog-post_27.html

1 comment:

THANGAKANI TRANSPORT said...

enna sir indhu madhathai mattum ippadi thaakki matra ella madhamum nalla madhama irukkunnu thappaa proof pannina mathiri irukku

Post a Comment